தங்கம் விலை மளமளவென சரிந்தது!
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதற்கு டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரி, அமெரிக்கா சீனா வர்த்தக மோதல், இந்தியா பாகிஸ்தான் பதற்றம் என பல்வேறு காரணங்கள் இருந்தது. சென்னையில் கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9000-ஐ தாண்டியிருந்தது.
இருப்பினும், இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அமெரிக்கா சீனா வர்த்தக மோதல் முடிவுக்கு வந்தது. இந்தியா பாகிஸ்தான் பதற்றமும் முடிந்தது. இதனால் கடந்த வாரம் தங்கம் விலை கணிசமாகக் குறையத் தொடங்கியது. 10 நாட்களுக்கு முன்பு மே 10ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.72,360ஆக இருந்தது. அடுத்த 5 நாட்கள் அது மெல்லக் குறைந்து மே 15ம் தேதி குறைந்தபட்சமாக ரூ.68,800ஐ எட்டியது.
ஆனால், அதன் பிறகு சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.69,680க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8710 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ. 1 குறைந்து ஒரு கிராம் ரூ. 109க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.