தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.39,000-த்தை தாண்டியது..
தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.39,000-த்தை தாண்டியது..

கொரோனா தொற்று காலத்திலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான நிலை காணப்பட்டு வருகிறது.
கடந்த 1ஆம் தேதி ஒரு சவரன் ரூ.38,520, 2ஆம் தேதி ரூ.38,952, 3ஆம் தேதி ரூ.38,800க்கும் விற்பனையானது. 5ஆம் தேதியான நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,821க்கும், சவரன் ரூ.38,568க்கும் விற்கப்பட்டது.
ஒரே நாளில் சவரன் ரூ.232 குறைந்தது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. ஆனால் நகை வாங்குவோரின் இந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை.
மாறாக 6ஆம் தேதி தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,845க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,760க்கும் விற்கப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தங்கம் சிறிதளவு உயர்ந்து வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரன் ரூ. 48 உயர்ந்து ரூ. 39,096க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.4,887க்கு விற்பனை ஆகிவருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 காசுகள் உயர்ந்து ரூ.66.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்து வரும் மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறவுள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
newstm.in