தொடர் சரிவில் தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன ?
அக்டோபர் மாத இறுதியில் தங்கம் சவரனுக்கு ரூ.59,640-க்கும் கிராமுக்கு ரூ.7,455-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், நவம்பவர் மாத தொடக்கநாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.59,080-க்கும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,385-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.58,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இரண்டு நாட்களாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், கடந்த 23-ந் தேதி உச்சத்தை தொட்ட நிலையில், அதன் பின்னர் விலை குறைந்தது. அதன்பின்னர் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்தது.
வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.106-க்கும், கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.