இன்று சற்று உயர்ந்த தங்கம் விலை..! ஒரு கிராம் 9,105க்கு விற்பனை..!
நமது நாட்டில் திருமணம் தொடங்கி எல்லா நல்ல நிகழ்வுகளிலும் தங்கத்திற்கு முக்கிய இடம் இருக்கிறது எனச் சொன்னால் மிகையாகாது.
தங்கம் விலை உயர்ந்தாலும் சரி, குறைந்தாலும் சரி, அதன் மீதான மக்களின் ஈர்ப்பு மட்டும் குறையப் போவதே இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தங்கம் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஒரு பக்கம் தங்கத்தை மக்கள் சேமிப்பாகப் பார்க்கும் அதேநேரம் நமது கலாச்சாரத்திலும் தங்கத்திற்கு முக்கியமான பங்கு இருப்பது இன்னொரு காரணம்.
இந்த சூழலில் தங்கம் விலை நேற்று சற்று குறைந்திருந்தது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமில்லாமல் , ஒரு கிராம் ரூ.124-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.