வாரத்தின் முதல் நாளே அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் மட்டும் ரூ.3,000க்கும் கூடுதலாக குறைந்தது. இது விஷேசங்களுக்கு தங்க நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (நவ.,18) தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது.
இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,995-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களின் தங்கம் விலை நிலவரம்
நவ., 18ல் - ரூ.6,995
நவ.,17ல் - ரூ.6,935 - விலையில் மாற்றம் இல்லை
நவ.,16ல் - ரூ.6,935 - ரூ.10 குறைவு
நவ.,15ல் - ரூ.6,945 - ரூ. 10 அதிகரிப்பு
நவ.,14ல் - ரூ.6,935 - ரூ.110 குறைவு