புதிய உச்சத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன...?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.77,640-க்கு விற்பனையாகிறது. இதே ஏறுமுகம் நீடித்தால் தங்கம் ஒரு பவுன் ரூ.78 ஆயிரத்தை விரைவில் தொட்டுவிடும்.
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.136-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
27.08.2025 ஒரு சவரன் ரூ.75,120
28.08.2025 ஒரு சவரன் ரூ.75,240
29.08.2025 ஒரு சவரன் ரூ.76,280
30.08.2025 ஒரு சவரன் ரூ.76,960
01.09.2025 ஒரு சவரன் ரூ.77,640