ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை – இன்றைய நிலவரம் தெரியுமா?
தமிழகத்தில் தங்கத்தை ஆபரணமாக மட்டும் அல்லாமல் முதலீடாகவும் பலர் கருதி வருகின்றனர். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 65 ரூபாய் உயர்ந்து, ரூ.6,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ரூ.54,080-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,484-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 53 ரூபாய் உயர்ந்து, ரூ.5,537-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 96,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,500 ரூபாய் உயர்ந்து, ரூ.97,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.97.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.