1. Home
  2. தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு..!

1

 தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து, 11,980 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து, 95,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து, 192 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
 

இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று (டிச.,01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,070க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.12 ஆயிரத்தைக் கடந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 அதிகரித்து ஒரு கிராம் ரூ.196க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like