தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு; ஒரு சவரன் ரூ.78,440!
செப் 01 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9705 ரூபாய்க்கும், சவரன் 77,640 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (செப் 02) தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 9725 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 77,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (செப் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.78,440க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9805க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.78 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.