1. Home
  2. தமிழ்நாடு

ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை கடந்தது..!

1

சர்வதேச பொருளாதார நில​வரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம் செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்​1பி விசாகட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக்காரணமாக அமைந்தது. அமெரிக்கா வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதுவும் தங்கம் விலை உயர ஒரு காரணம்

இதன்​பிறகு, ஓரிரு நாட்கள் இறக்கமாகவும், பெரும்பாலான நாட்கள் ஏற்றமாகவும் இருந்து வந்தநிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் (அக்.6) பவுன் தங்கம் ரூ.89 ஆயிரத்தை தொட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றும் (அக்.7) பவுனுக்கு ரூ.600 உயர்ந்​து, ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலையில் (அக்.8) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனையானது. அதேபோல் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.90,400-க்கு விற்பனையானது. காலையில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.167-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,67,000-க்கும் விற்பனையானது

இந்த சூழலில், தங்கத்தின் விலை நேற்று 2-வது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி பிற்பகலில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,385 ஆக உயர்ந்து விற்பனையானது. அதேபோல பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,080 ஆக அதிகரித்து விற்பனையானது. இதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1,480 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும், வெள்ளியின் விலையும் ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,70,000 ஆக உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like