மீண்டும்..மீண்டுமா..? ரூ.70 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை..!

இந்திய மக்களின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம், நாள்தோறும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் தங்கம் விலை, அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் எகிறி, 75 ஆயிரத்தைத் தொட்டது.
அதனைத் தொடர்ந்து, படிப்படியாகக் குறைந்த தங்கம் கடந்த 15ஆம் தேதி ரூ.68 ஆயிரத்துக்குச் சென்றது. அப்பாடா.. குறைந்து வருகிறது என மக்கள் எதிர்பார்த்த நேரத்தில் மீண்டும் ரூ.70 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அந்த வகையில், இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று (மே 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.35 அதிகரித்து, ரூ.8,755-க்கும்; சவரனுக்கு ரூ.280 அதிகரித்து, ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது. அதேபோல, வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1,09,000-க்கும் விற்பனையாகிறது.