ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க மாஸ்க் அணிந்து வலம் வரும் நபர்.. ஆனால் கொரோனா நிச்சம் !

ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க மாஸ்க் அணிந்து வலம் வரும் நபர்.. ஆனால் கொரோனா நிச்சம் !

ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க மாஸ்க் அணிந்து வலம் வரும் நபர்.. ஆனால் கொரோனா நிச்சம் !
X

மகாராஷ்டிராவில் ஒருவர் சுமார் ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து வருகிறார்.

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

குறிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்பது தான். இதனை கடைபிடித்து மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கொரோனாவை விரட்டி அடிக்க முடியும் என அரசு கூறி வருகிறது. 

அந்த வகையில் மாஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில் மகாராஷ்டிராவில் ஒருவர் தங்கத்தில் மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து கொண்டு வலம் வருகிறார். 

புனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர் தங்க நகைகள் மீது ஆர்வம் உடையவர். இவர் தற்போது தங்கத்தினால் ஆன மாஸ்க் ஒன்றை தயாரித்து அணிந்து வருகிறார்.

சுமார் 2.89 லட்சம் மதிப்புடைய இந்த மாஸ்க்கில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன. இதனால் தனக்கு சுவாசத்துக்கு பிரச்னை இல்லை என ஷங்கர் குரேட் கூறுகிறார்.

அதே நேரத்தில் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த தங்க மாஸ்க் உதவுமா என்பது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் தங்க மாஸ்க் குறித்து பதிவிட்டுள்ள இணையவாசிகள் தங்க மாஸ்கால் உங்களுக்கு விளம்பரம் கிடைக்குமே தவிர தொற்றில் இருந்தெல்லாம் காக்காது என தெரிவித்துள்ளனர்.   

newstm.in 

Next Story
Share it