2017ஆம் ஆண்டில் தங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்கியவர்களுக்கு அடித்தது செம ஜாக்பாட்..!
ரிசர்வ் வங்கி தங்க முதலீட்டுப் பத்திரம் 2017-18 சீரிஸ்-II பத்திரங்களை 2017ஆம் ஆண்டின் ஜூலை 10ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை விற்பனை செய்தது. இந்த பத்திரங்கள் 2017 ஜூலை 28ஆம் தேதியன்று வெளியிடப்பட்டன. அப்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,830 ரூபாயாக இருந்தது. அதேபோல, தங்க முதலீட்டுப் பத்திரங்களை ஆன்லைனில் வாங்கியவர்களுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டது.
தங்க முதலீட்டுப் பத்திர திட்டத்தில் 2017-18 சீரிஸ்-II பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபம் பார்த்துள்ளனர். 8 வருடங்களில் 250.67 சதவீத லாபம் கிடைத்துள்ளது. இது ஆன்லைன் தள்ளுபடி மற்றும் வட்டி இல்லாமல் கிடைத்த லாபம் ஆகும். இந்த பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி கிடைத்தது. இந்த பத்திரங்கள் 8 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும். ஆனால், 5 வருடங்களுக்கு பிறகு தேவைப்பட்டால் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
முதலீட்டாளர் எவ்வளவு தங்கம் வாங்கினாரோ, அதற்கான சந்தை விலையை திரும்ப பெற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை அதிகரிக்கும் போது முதலீட்டாளர்கள் லாபம் பெற முடியும். தங்க முதலீட்டுப் பத்திரங்கள் தங்கத்தை நேரடியாக வாங்குவதை விட சிறந்தது என்று கூறப்படுகிறது. தங்கத்தை வீட்டில் வைப்பதால் ஏற்படும் ஆபத்து மற்றும் செலவுகள் இதில் இல்லை. முதிர்வு நேரத்தில் தங்கத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்ப அதிக லாபம் கிடைக்கும். மேலும், அவ்வப்போது இதற்கு வட்டியும் கிடைக்கும்.
தங்க நகைகளை வாங்கும்போது செய்கூலி மற்றும் தங்கத்தின் தரம் குறைவு போன்ற பிரச்சனைகள் உள்ளன. ஆனால், தங்க முதலீட்டுப் பத்திரங்களில் அந்த பிரச்சனைகள் இல்லை. இந்த முதலீட்டுப் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியின் கணக்கில் அல்லது டீமேட் கணக்கில் இருக்கும். இதனால், பத்திரத்தை தொலைத்து விடுவோம் என்ற பயம் தேவையில்லை. அதனால்தான் இந்தப் பத்திரங்கள் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. தங்கத்தின் விலை உயரும் போது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும், இதற்கு வட்டியும் கிடைப்பதால் இது ஒரு சிறந்த முதலீட்டு விருப்பமாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் மத்திய நிதியமைச்சகம் தங்க முதலீட்டுப் பத்திரங்களை மீண்டும் வெளியிடலாமா என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று கூறியிருந்தது. ஒருவேளை மீண்டும் பத்திரங்கள் வெளியிடப்பட்டால் முதலீட்டாளர்கள் அதை வாங்கி பயன்பெறலாம். தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்வது எளிதானதுதான். இதற்கு டீமேட் கணக்கு மற்றும் டிரேட் கணக்கு வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ வாங்கலாம்.
தங்க முதலீட்டுப் பத்திரங்கள் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றவை என்பதால் குறுகிய காலத்தில் லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்காது. தங்கத்தின் விலை உயரும் போது மட்டுமே இதில் லாபம் பார்க்க முடியும். இந்தப் பத்திரங்கள் அரசாங்கத்தால் வெளியிடப்படுவதால் இது பாதுகாப்பானது. தங்க முதலீட்டுப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் லாபம் வரிக்கு உட்பட்டது. எனவே, முதலீடு செய்வதற்கு முன் வரி விதிமுறைகளை தெரிந்து கொள்வது நல்லது.
.png)