1. Home
  2. தமிழ்நாடு

ஒரேடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை..!

1

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.4 உயர்ந்த நிலையில் இன்றும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.6,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 10 கிராம் ரூ.67,800-க்கும், 100 கிராம் ரூ.6,78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,554-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.44,432-க்கும், (10 கிராம்) ரூ.55,540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 பைசா உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.1.40 பைசா உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.98.50 க்கும் 10 கிராம் 985-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி ரூ.98,500 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் எப்போதும் சாமானிய மக்களின் முக்கிய சேமிப்பாகவே இருந்து வருகிறது. எதிர் வரும் காலங்களில் தங்கம் விலை ரூ.1 லட்சம் வரை உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்

Trending News

Latest News

You May Like