இலை முழுக்க சோறுடன் அம்மன் நயன்தாரா..!

இலை முழுக்க சோறுடன் அம்மன் நயன்தாரா..!

இலை முழுக்க சோறுடன் அம்மன் நயன்தாரா..!
X

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அவருடைய ரசிகர்கள் செல்லமாக அழைப்பது உண்டு.தற்போது இவர் மூக்குத்தி அம்மன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார்.

ஆர் ஜே பாலாஜி ரேடியோவில் பணியாற்றி வந்தவர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே .இயக்குனர் சுந்தர் சியின் ஆதரவுடன் சினிமாவில் அறிமுகமானவர் தற்போது காமெடியன் என்கிற லிமிட்டை கடந்து ஹீரோ இயக்குனர் என கலக்கி வருகிறார் இவர் எல்கேஜி என்கிற திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு மார்க்கெட் எகிறியது.

இதனைத் தொடர்ந்து தற்போது மூக்குத்தி அம்மன் என்கிற திரைப்படத்தையும் இவரும் சரவணன் என்பவரும் இணைந்து இயங்கி வருகின்றனர்.தினேஷ் கிருஷ்ணன் என்பவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பவர் இசையமைத்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் வெளிவரும் என்று சத்தியம் செய்து வந்தார்.

ஆனால் படம் இணையதளத்தில் தான் ரிலீஸாகிறது ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் விலை போயுள்ளது. தற்போது நயன்தாரா நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.கண்டிப்பாக காமெடி காட்சிகள் அதிகம் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது தற்போது இந்த படத்திற்கான ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது.

அந்த போஸ்டரில் நடிகை நயன்தாரா இலை முழுக்க சோறுடன் அதை அல்லி சாப்பிடுவது போன்று ஒரு போஸ். அந்த போஸ்டரை பார்த்து விட்டு இணையவாசிகள் எங்க தலைவி ராஜ்கிரன் டப் கொடுப்பார் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Next Story
Share it