கடவுள் கல்லாலயே கைவரிசை!! ராம ஜென்ம பூமி வங்கிக்கணக்கில் பல லட்சம் திருட்டு!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பணிகளை மேற்கொள்ளும் அறக்கட்டளை தான் ஸ்ரீ ராம் ஜென்மபூமி. அதன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6 லட்சம் மர்ம நபர்களால் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
லக்னோவில் உள்ள இரண்டு வங்கிகளில் காசோலை மூலமாக பணம் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். செப்டம்பர் 1 ஆம் தேதி வங்கியில் இருந்து ரூ.2.5 லட்சமும் இரண்டு நாட்களுக்குப் பிறகு ரூ.3.5 லட்சமும் எடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.9.86 லட்சத்தை எடுக்க முயன்றபோது அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் வங்கிக்கு தெரிவித்த தகவலின் பேரில் மோசடி தடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அயோத்தி கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கை விசாரிக்க இணைய நிபுணர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.