1. Home
  2. தமிழ்நாடு

நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!

1

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையானது வாரத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செயல்படும். இங்கு ஆடு, மாடுகள், கோழி ஆகியவற்றை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதை ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். 

ஆட்டு சந்தை ஆடு ரம்ஜான் ரமலான் பக்ரீத்

இங்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆடு, மாடுகள் விற்பனை நடைபெறும். அதுபோல் பண்டிகை காலங்களில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கும். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து ஆட்டிறைச்சி சாப்பிடுவது வழக்கம் ஆகும். இதற்கு தேவையான வெள்ளாடு, செம்மறி ஆடுகளை இறைச்சி கடைக்காரர்கள், வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவும், சந்தைகளுக்கு சென்றும் வாங்கி வருகிறார்கள்.

இனி ஆடு, மாடு சாலைகளில் சுற்றி திரிந்தால் ரூ 10000 அபராதம்!!

மேலப்பாளையம் கால்நடை சந்தை நேற்று செயல்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது ஆடு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகள் ரகம் வாரியாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை ெசய்யப்பட்டது. இறைச்சி கடைக்காரர்கள், வியாபாரிகள் மொத்தமாக ஆடுகளை வாங்கி லோடு ஆட்டோ, மினி லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like