1. Home
  2. தமிழ்நாடு

கோவை Goat Robotics நிறுவனம் அசத்தல் கண்டுபிடிப்பு..!

1

கோவை மாவட்டம் பீளமேடுவில் இயங்கி வரும் Goat Robotics ஆனது, வாகனத் தொழில்துறையினரின் பொருள் கையாளுதல் நடவடிக்கைகளில் பெரிதும் உதவக்கூடிய AMR(Autonomous mobile robots)களை உற்பத்தி செய்கிறது. AMR என்பது, ஓட்டுநரே இல்லாமல் இயங்கக்கூடிய தானியங்கி வாகனம் ஆகும். இந்த கோட் ரோபோட்டிக்ஸின் இணை நிறுவனர்களான முத்து, முகேஷ், தர்மராஜ் மற்றும் நவீன் ஆகியோர் பிஎஸ்ஜி டெக்கின் முன்னாள் மாணவர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் குழு தங்கள் தயாரிப்புகளை வெளியிட்டனர்.

Goat Robotics-ன் AMRகள் AI உடன் பொருத்தப்பட்டு வெவ்வேறு வடிவங்களில் சில கிலோகிராம்கள் முதல் பல டன்கள் வரை எடையுள்ள உதிரிபாகங்களை எடுத்துச்செல்லும் திறனுடையது. மேலும், இந்த Autonomous mobile robots-களை Made in india திட்டத்தில் முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் ரூ.400 கோடி முதல் 1000 கோடி சந்தை மதிப்பை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதுதொடர்பாக கோட் ரோபோட்டிக்ஸின் இணை நிறுவனர்களான முத்து, முகேஷ், தர்மராஜ் மற்றும் நவீன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த தானியங்கி வாகனம் குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் குழுவிற்கு செயல்முறை அடிப்படையில் விளக்கி காட்டினர். அதில் கோட் ரோபோட்டிக்ஸ் ஆனது ஏஐ தொழில்நுட்பத்துடன் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்கிறது. இதுதொடர்பாக, முன்னோட்ட காட்சிகள், விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.இந்த நிகழ்ச்சி உலகளவில் பிரபலமான அமெரிக்க வணிக ரியாலிட்டி ஷோ ஷார்க் டேங்க் போன்றது.


 


 

Trending News

Latest News

You May Like