1. Home
  2. தமிழ்நாடு

உடனே கடைக்கு கிளம்புங்க..! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

Q

தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று சற்று குறைந்திருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 57,080 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,135 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like