1. Home
  2. தமிழ்நாடு

உடனே கடைக்கு கிளம்புங்க..! 4 நாட்களில் சவரனுக்கு ரூ 2720 குறைந்த தங்கம் விலை!

Q

சென்னையில் நவம்பர் 13 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,360 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,045 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று நவம்பர் 14 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 880 குறைந்துள்ளது. இதனால் சவரன் ரூ 55,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 110 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,935 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 4 நாட்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 2720 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like