ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி..!
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் கடந்த மாதம்14ம் தேதி தங்க நகைகள் திருடு போயுள்ளது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறை, ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமியிடம் விசாரணை விசாரணை நடத்தினார்கள்.
இதனையடுத்து, விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராக லட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. காவல்துறையின் அடுத்தடுத்த விசாரணை காரணமாக லட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால், இன்று அவர் வீட்டில் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். லட்சுமியை மீட்ட அவரது உறவினர்கள் சென்னை, இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.