பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கூட்டாளி கைது..!

ஞானசேகரன் கூட்டாளி பொள்ளாச்சி முரளி என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதால் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், "யார் அந்த சார்? என்ற ஞானசேகரன் தொலைபேசி உள்ள சார் தான் தற்போது கைது செய்யப்பட்ட பொள்ளாச்சி முரளியா?" என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் ஞானசேகரனிடம் திருட்டு நகை வாங்கியதாக நகை வியாபாரி குணால் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.