ஞானசேகரன் வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஞானசேகரனுக்கு எதிராகப் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை முன்வைத்துள்ளனர். இன்று அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியபோது, குற்றப்பத்திரிகையின் நகல் அவருக்கு வழங்கப்பட்டது.
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஞானசேகரனுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளது.