1. Home
  2. தமிழ்நாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது!

Q

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024 தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

‘1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை’ என்ற ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சுமார் 5.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜவுளி, காலணி, எலக்ட்ரிக் வாகனம், வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து அமர்வுகள் நடத்தப்படவுள்ளன.

மாநாட்டில் பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆட்டோமொபைல், மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை சிலையை நினைவுப் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேடையில் இருந்த முதலீட்டாளர்களுக்கும் ஜல்லிக்கட்டு வடிவ சிலையை முதலமைச்சர் வழங்கினார்.

Trending News

Latest News

You May Like