1. Home
  2. தமிழ்நாடு

சற்றுமுன் வெளியான கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ..!

1

'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

'கோட்' படத்தின் டிரெய்லர் இன்று (ஆக. 17) மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் டிரெய்லர் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.கோட் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.


 

Trending News

Latest News

You May Like