எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்...தண்ணீர் மட்டும் தேங்கினால் ஆட்சியை விட்டு போயிடுறேன் - சீமான்..!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரையில் இருந்து நேற்று தான் வந்தேன். சாலையில் போய் பாக்கறீங்களா? எங்குமே சாலை கிடையாது, எல்லாம் சவக்குழிகள். கடந்த 60 ஆண்டுகளாக இந்த நிலத்தை ஆண்டது தி.மு.க., அ.தி.மு.க., தான். சென்னையில் மழைநீர் வடிந்து வெளியேறுவதற்கு ரூ.2,500 கோடி தான் தேவை என்கிறார்கள். எத்தனை ஆயிரம் கோடிகள் ஒதுக்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
இவங்க வந்தே (தி.மு.க.,) ரூ.4,000 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். ஒரு ரூ.2,000 கோடியில் தலைநகரிலேயே மழை நீர் அழகா வெளியேறுது. நீங்க எத்தனை நாடுகளுகளுக்கு அந்நிய முதலீட்டை கொண்டுவர பயணிக்கிறீர்கள்? சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகளில் மழையே பெய்வது இல்லையா? மழை பெய்கிறது. ஆனால், சாலைகளில் தண்ணீர் தேங்காமல், மக்கள் வாழும் இடங்களில் வெள்ளம் புகாமல், அதனை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்பதை பார்க்கிறீர்கள் தானே?
எத்தனை ஆண்டுகளுக்கு இந்த கொடுமை. வெள்ளத்தில் மிதந்தானா? வீடு இடிந்து விட்டதா? ஒரு ஐந்தாயிரம் கொடுத்து விடு என்பது எல்லாம் ஒரு ஆட்சி முறையா? ஒரு தீர்வு முறையா?
சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.2,500 கோடி ஒதுக்கி நடவடிக்கை எடுத்தாலே போதும் என்று அதிகாரிகளே சொல்கிறார்கள். இது ஒரு சாதாரண அடிப்படை கட்டமைப்பு. கழிவுநீர், மழைநீர் கலந்து ஓடுவதை தடுக்க கால்வாய் வெட்ட துப்பில்ல, நீ எதுக்கு மெட்ரோ போடுற. நான் கேட்டனா உன்கிட்ட. நீர் ஓடுவதற்கு கால்வாய் வெட்டுணு சொன்னா, நீ கார் ஓட, ரயில் ஓட கால்வாய் வெட்டிட்டு இருக்க.மெட்ரோவில் பயணம் செய்யும் மக்கள் எத்தனை சதவீதம்ணு சொல்லுங்க. எல்லார் வீட்டிலையும் கார் இருக்கு, அதுபோக அரசுப் போக்குவரத்து இருக்கு. ஆட்டோ இருக்கு, பைக் டாக்சி இருக்கு. அப்படியிருக்கும் போது இந்த மெட்ரோவில் எத்தனை பேர் போவாங்க. இதுவரை ரூ.62 ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கீங்க. சென்னையில் தண்ணீர் வழிந்தோட ரூ.2,500 கோடி ஒதுக்க மாட்டீங்களா?
குளங்களை ஆக்கிரமிக்கும் வீடுகளை இடிக்கும் நீ, பள்ளிக்கரணை ஏரி குப்பையைக் கொட்டி ஆக்கிரமிச்சிருக்க. உன்னை என்ன பண்ணலாம். மூளை இருக்கிறவன் பள்ளிக்கரணை ஏரியை குப்பையை கொட்டி மூடுவானா? யாருமே உங்களை கேள்வி கேட்கக் கூடாதா? மக்கள் ஆக்கிரமிப்பு என இடிக்கும் நீ, ஆக்கிரமிக்கும் போது கோமாவில் படுத்து இருந்தயா? ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ரேஷன் கார்டு, ஓட்டு அட்டை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு எல்லாம் கொடுத்தது யார்? அரசு தானே. 60 ஆண்டு காலம் கழித்து தான் ஆக்கிரமிப்பு என்று தெரியுதா?
சென்னை என்பது நீர்த்தேக்கம். ஏரியில் கட்டப்பட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்க உத்தரவிடும் கோர்ட்டே ஏரியில் தான் கட்டப்பட்டுள்ளது. நான் கூட வழக்கு போட உள்ளேன். இந்த கோர்ட்டே ஏரியை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டிருக்கு, இடிங்கணு. மதுரையில் இருக்கும் ஐகோர்ட் கிளையும் ஏரியில் தான் கட்டப்பட்டுள்ளது.
என்னைப் போல போராட முடியல. அதனால் தான் தண்ணீர் வீட்டுக்குள்ள போயி, வெளிய போங்கடா என்கிறது. வீரநாராயண ஏரி 16 கி.மீ., தூரம் கொண்டது. ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு 16 கி.மீ., தான். அப்போ மினி கடலே வெட்டி வச்சிருக்கான். அதனை தூர் வாரியிருந்தால், கடலூர் ஏன் வெள்ளத்தில் மிதக்குது. தொலைநோக்கு பார்வையே இல்ல.
தம்பி உதயநிதியே பதிவு போடுறாரு, ஆண்டுதோறும் இதே பிரச்னை (சென்னை வெள்ளம்), இந்தப் பிரச்னையை ஒழிக்க முடியாதா என்று. உங்களை ஒழித்தால் மட்டும்தான் முடியும். வேறு எப்படி ஒழிக்க முடியும். ஒரு ஐந்தாண்டு ஆட்சியைக் கொடுங்க. நீர் தேங்கினால், ஆட்சியை விட்டு போயிடுறேன், இவ்வாறு அவர் கூறினார்.