வைரலாகும் கீதாஞ்சலி செல்வராகவனின் கர்ப்பகால போட்டோ ஷூட் !

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி நடத்திய கர்ப்பகால போட்டோ ஷூட் சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா உலகில் உள்ள திரை பிரபலங்கள் நிறைமாத கர்ப்பமாக உள்ள போது போட்டோ ஷூட் நடத்துவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தமிழ் சினிமா உலகில் புகழ் பெற்ற இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். இவர், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு லீலாவதி என்ற மகள், ஓம்கர் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி 3-வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். வரும் ஜனவரி மாதம் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நிறைமாத கர்ப்பமாக உள்ள செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதனை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.