ஆசிரியர் அறைந்ததால் சிறுமியின் காதில் இருந்து கொட்டிய இரத்தம்..!
தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில் சிறுமியின் கன்னத்தில் குமார் என்ற ஆசிரியர் பலமாக அறைந்துள்ளார்.
இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது. பள்ளியில் வேலை செய்துவந்த மற்றொரு ஆசிரியை காயமுற்ற சிறுமி கூறுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் சிறுமியைத் தாக்கிய ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் குமார் மீது எந் புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் சக ஆசிரியை பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
In a distressing incident, a girl student was subjected to brutal punishment for not completing her homework at school in #Jagtial, #Telangana. The teacher hit the girl student studying in class two on her ear so hard that she started bleeding heavily from her ear. A video of the… pic.twitter.com/cwlN8YGLkl
— Hate Detector 🔍 (@HateDetectors) August 22, 2024