காதலி பேச மறுப்பு.. இளைஞரின் செயலால் குடும்பத்தினர் அதிர்ச்சி !

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் மதன்ராஜ் (26) என்ற இளைஞர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர்.
அப்போது இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி தங்கள் காதலை வளர்த்தனர். இந்த விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரியவந்ததால் பிரச்னை எழுந்தது. மேலும் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து அப்பெண் தனது காதலை கைவிட்டார். மேலும் மதன்ராஜுடன் பேசுவதையும், சந்திப்பதையும் அவர் தவிர்த்து வந்தார். ஆனால் மதன்ராஜ் எவ்வளவோ முயன்றும் அந்த பெண் பேச மறுத்ததால் ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து மதன்ராஜ், காதலிக்கும் போது அந்த பெண்ணுடன் எடுத்துக் கொண்ட படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.
இதைப்பார்த்து பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப்பெண்ணின் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி மதன்ராஜை கைது செய்தனர்.
newstm.in