சாலையில் வைத்து சிறுமி கழுத்தறுத்து கொலை.. மாநிலத்தையே உலுக்கிய கோர சம்பவம் !

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்துவரும் வரலட்சுமி என்ற 17 வயது சிறுமியை அனில் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இளைஞர் சிறுமியிடம் பல முறை காதலை வெளிப்படுத்தியும் அவர் அதனை நிராகரித்து வந்துள்ளார். இந்த நிலையில், அச்சிறுமி கஜுவாக்கா பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த அனில் அவரை மறித்து காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஆனால் அதற்கு சிறுமி வரலட்சுமி மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருமிருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அனில் சிறுமியை தாக்கினார்.
மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வரலட்சுமியின் கழுத்தை அனில் அறுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுமி ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டனர். மேலும் சந்தேகத்தின்போரில் அனிலை பிடித்து விசாரித்தப்போது கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கொலையாளி அனிலை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரு தலை காதலால் சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in