குப்பை தொட்டியில் குழந்தையை அமர வைத்து பணி செய்யும் பெண்!

குப்பை தொட்டியில் குழந்தையை அமர வைத்து பணி செய்யும் பெண்!

குப்பை தொட்டியில் குழந்தையை அமர வைத்து பணி செய்யும் பெண்!
X

திருப்பூரில் குழந்தையை குப்பை தொட்டியில் அமர வைத்துக்கொண்டு தூய்மை பெண் பணியாளர் ஒருவர் பணி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சுஜா திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார். இவ் தனது 3 வயது மகள் பொட்டுவை தனியாக விட்டுச் செல்ல இடம் இல்லாத காரணத்தினால் குழந்தையை தன்னுடனேயே அழைத்துச் செல்கிறார். குப்பை தள்ளுவண்டி வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு குப்பை கூடையில் குழந்தையை அமர வைத்துவிட்டு, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சுஜா தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார். இது காண்போரை பதற வைப்பதாக அமைந்துள்ளது.

எனவே கொரோனா பரவல் காலத்திலும் ஓயாமல் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி வழங்க வேண்டுமென்றும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய உதவியை அரசு செய்துகொடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in
 

Next Story
Share it