குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமி கற்பழிப்பு! 5 மாத கர்ப்பம்!!

17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் பெற்றோர் இருவரும் பணிபுரிவதால் பக்கத்து வீட்டில் அவரை விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி சிறுமிக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சிறுமியின் தாயார் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தார்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்(29) என்ற இளைஞர் முதியவர் இந்திரா வீட்டிற்கு அடிக்கடி வருவதும், அப்போது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
அப்போது ராஜேஷ் சிறுமிக்கு குளிர்பானம் வாங்கி வந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சிறுமிக்கு ராஜேஷ் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதில் சுயநினைவை இழந்த சிறுமியை ராஜேஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in