1. Home
  2. தமிழ்நாடு

திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல்!!

திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல்!!


ஃபேஸ்புக்கில் பழகிய சிறுமியை திருமணம் ஆசை காட்டி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பத்தைச் சேர்ந்த நரசிம்மன் என்பவர், உடபயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக உள்ளார். குடும்பப் பிரச்னையால் இவரின் 2 மனைவிகள் பிரிந்து சென்ற நிலையில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் நரசிம்மனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல்!!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறுமியை அவர் கடத்திச் சென்றார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து விசாரித்த காவல்துறையினர், தெலங்கானா மாநிலத்தில் இருந்த சிறுமியை மீட்டனர்.

அவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும், அவருக்கு 8 மாத ஆண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நரசிம்மனை கைது செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like