சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை : பிரபல கிரிக்கெட் வீரர் மீது வழக்கு!!

14 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்து மிரட்டிய புகாரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் யாஷிர் ஷா தற்போது பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறார். இவர் மீது இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாலிமார் காவல் நிலையத்தில் 14 வயதாகும் சிறுமி, பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், யாசிர் ஷாவின் நண்பர் ஃபர்ஹான் ன்னை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நடந்த சம்பவத்தை அவர் வீடியோவாக எடுத்து வைத்து தன்னை மிரட்டத் தொடங்கினார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஃபர்ஹான் மிரட்டுவது குறித்து அவரின் நண்பரான கிரிக்கெட் வீரர் யாசிர் ஷாவுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை ஏளனம் செய்து சிரித்தார். மேலும் தனக்கு சிறு வயது பெண்களை மிகவும் பிடிக்கும் என கூறினார்.
மேலும் யாசிர் ஷாவும், அவரின் நண்பர் ஃபர்ஹானும் சிறுமிகளை குறிவைத்து பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோக்களாக எடுத்து வைத்து மிரட்டி வருகிறார்கள். யாசிர் அவரின் நண்பர் செய்த இக்கொடூர செயலை மறைத்து அவருக்கு ஆதரவாக இருக்கிறார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷாலிமார் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார். இதனிடையே போலீசில் புகார் அளித்த பின்பு, யாசிர் ஷா தன்னை தொடர்பு கொண்டு உனக்கு ஒரு ஃபிளாட் வீடும், அடுத்த 18 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் பணமும் தருவதாக கூறினார் என சிறுமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in