மேட்டுப்பாளையத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து : சிறுமி உயிரிழப்பு..!

பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றுக் கொண்டு உதகைக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் மேட்டுப்பாளையத்தில் கோத்தகிரி சாலையில் பவானிசாகர் காட்சி முனை பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் சிக்கி சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.