சக மாணவியுடன் போட்டி : 572 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி தற்கொலை..!

உ.பி பண்டேபூர் பகுதியை சேர்ந்த மாணவி சாஷி. இவர் 10-ம் வகுப்பு பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் பள்ளியளவில் முதலிடம் வரமுடியாத விரக்தியால் சாஷி தற்கொலை செய்துகொண்டு உள்ளார். இந்த செய்தி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அப்பள்ளியில் முதலிடம் பிடித்தவருக்கும் சாக்ஷிக்கும் 3 மதிப்பெண்கள் மட்டுமே வித்தியாசமாக இருந்துள்ளது.
மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலே அவரது பெற்றோர்கள் இறுதிச் சடங்குகளை செய்துள்ளனர். இதுக் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.