1. Home
  2. தமிழ்நாடு

ராட்சத ராட்டினம் கவிழ்ந்து விபத்து..!

1

திருப்பத்தூரில் உள்ள முருகன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடிகள் மற்றும் தேர் இழுத்து தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

இந்த நிலையில், திருவிழாவில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு வகையான ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பிரபல பாடகர் மூக்குத்தி முருகன் பங்கேற்ற இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அதனைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்திருந்தனர். மேலும், அங்கு இருந்த ராட்டினத்தில் ஏராளமானோர் சுற்றி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக ராட்சத ராட்டினம் சாய்ந்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் இருந்து மக்கள் அங்கிருந்து வெளியேறினர். உடனடியாக ராட்டின ஆப்ரேட்டர்கள் ராட்டினத்தை நிறுத்திவிட்டு, பொதுமக்கள் உதவியுடன் ராட்டினத்தில் சிக்கிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


 

Trending News

Latest News

You May Like