இத தெரிஞ்சிக்கோங்க..! வங்கி லாக்கரில் எதையெல்லாம் வைக்கலாம்? எதையெல்லாம் வைக்கக் கூடாது?

லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்?
நகைகள், சொத்து தொடர்பான ஆவணங்கள், கடன் ஆவணங்கள், பிறப்பு சான்றிதழ், திருமணச் சான்றிதழ், காப்பீட்டு பாலிசிகள், சேமிப்புப் பத்திரங்கள் போன்ற மதிப்புமிக்க மற்றும் ரகசியமான பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
லாக்கர் யாருடைய பெயரில் உள்ளதோ அந்த வாடிக்கையாளருக்கு மட்டுமே சாவி மற்றும் லாக்கருக்கான அணுகல் வழங்கப்படும். வேறு எந்த குடும்ப உறுப்பினரோ அல்லது வேறு எந்த நபரோ அவரது பெயரில் அனுமதியின்றி லாக்கருக்குள் நுழைய முடியாது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, லாக்கர்களில் பணத்தை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
எந்தெந்த பொருட்களை லாக்கரில் வைக்கக் கூடாது?
ஆயுதங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருள், வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள், சிதைவுறக்கூடிய அல்லது கதிரியக்க பொருட்கள் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைக்க அனுமதி இல்லை.
வங்கி எதற்கு பொறுப்பாகும்?
புதிய விதிகளின்படி, வங்கியின் அலட்சியம் அல்லது வங்கி ஊழியரின் மோசடி காரணமாக வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள எந்தவொரு பொருளும் சேதமடைந்தால், வங்கி வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகை லாக்கரின் ஆண்டு வாடகையுடன் தொடர்புடையது. லாக்கரின் வருடாந்திர வாடகையை விட 100 மடங்கு தொகையை அந்த வங்கி செலுத்த வேண்டும். உதாரணமாக, ஒரு லாக்கரின் வருடாந்திர வாடகை ரூ. 2,000 என்றால், வங்கி ரூ. 2,00,000 வரை இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும்.