இதை தெரிஞ்சிக்கோங்க..! இந்த திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி தொழில் கடன் வழங்கப்படுகிறது... யாருக்கு கிடைக்கும் ?

தமிழ்நாடு முதலமைச்சர் 78-வது சுதந்திர தின உரையின்போது முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் முனைவாராக உருவாக்கிட " முதல்வரின் காக்கும் கரங்கள் " என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள்.
இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் வாயிலாக கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30% மூலதன மானியம், 3% வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
55 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரரின் விதவையர், இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும், முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள், முன்னாள் படைவீரரை சார்ந்த விதவை மற்றும் விவாகரத்து பெற்ற மகள் பயன் பெறலாம்.
அவர்களுக்கான வயது வரம்பில் தற்போது வயது 55 என்பதிலிருந்து தளர்வு வழங்கி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 25 வயதுக்குட்பட்ட மகன் என்பதிலிருந்து தளர்வு வழங்கி முன்னாள் படைவீரருடன் மகன் இணைந்து கடன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் வாயிலாக கடன் பெற்று தொழில் முனைவோராக விரும்பும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரரின் விதவையர், இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும், முன்னாள் படைவீரர்களை சார்ந்துள்ள திருமணமாகாத மகள், விதவையர் மகள் மற்றும் விவாகரத்தான மகள் exweichn@tn.gov.in என்ற இணையவழி தளத்தில் விண்ணப்பிக்கலாம்
மேலும்,விவரங்களுக்கு சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல் உதவி இயக்குநர் அவர்களை நேரில் 044-22350780 தொடர்பு அணுகி அல்லது தொலைபேசி வாயிலாக கொண்ட பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.