இதை தெரிஞ்சிக்கோங்க..! டிச.1 முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள்..!
எஸ்பிஐ கிரெடிட் கார்டு விதிகள் மாறும்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ -வில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. டிஜிட்டல் கேமிங் தளங்களில் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டுகளில் வெகுமதி புள்ளிகளின் பலன்கள் வழங்கப்படாது. இந்த புதிய விதியானது கிரெடிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் கேமிங்கில் பரிவர்த்தனை செய்யும் அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பாக்கெட்டுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் இணைந்து தங்கள் ரிவார்ட் பாயிண்ட்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை திருத்தியுள்ளன.
டிசம்பர் 1 முதல், YES வங்கி விமானங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு ரிவார்டு புள்ளிகளின் எண்ணிக்கையை வரம்பிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. HDFC வங்கி அதன் Regalia கிரெடிட் கார்டின் பயனர்களுக்கான லவுஞ்ச் அணுகல் விதிகளையும் மாற்றுகிறது. புதிய விதிகளின் படி, டிசம்பர் 1 முதல் லவுஞ்ச் அணுகலுக்குத் தகுதிபெற பயனர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.1 லட்சம் செலவழிக்க வேண்டும்.
HDFC பேங்க்: ஒரு காலாண்டுக்கு ரூ.1 லட்சம் வரை செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இலவச ஓய்வறை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
மோசடி செய்திகளை தடுக்க புதிய விதிமுறை
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிசம்பர் 1 முதல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. OTP மற்றும் வணிகச் செய்திகளைக் கண்டறிய புதிய விதிகள் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அதனால் போலி திட்டங்கள் மற்றும் ஃபிஷிங் வழக்குகள் குறைக்கப்படலாம்.
மாலத்தீவு கட்டணம்:
இந்தியாவிலிருந்து மாலத்தீவை சுற்றி பார்க்க செல்பவர்கள் இந்த மாதம் முதல் அதிக விமானக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் எக்கானமி வகுப்பு பயணிகளுக்கான பிளைட் கட்டணம் ரூ.2,532 ரூபாயிலிருந்து ரூ.4,220 ஆக உயர உள்ளது. அதேபோல பிசினஸ் வகுப்பு பயணிகளின் கட்டணம் 10,129 ரூபாயாக அதிகரித்துள்ளது முன்பு பாதிக்குப் பாதியாக இருந்த விலை இந்த முறை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணிகள் 20,257 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
தாமதமான ஐடிஆர் தாக்கல்
ஜூலை 31 காலக்கெடுவிற்குள் 2023-24 (FY 24) நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யத் தவறிய நபர்கள், டிசம்பர் மாதத்திற்குள் தங்கள் ITRஐச் சமர்ப்பிக்க இன்னும் வாய்ப்பு உள்ளது. ஆரம்ப காலக்கெடுவைத் தவறவிட்டவர்கள் இப்போது டிசம்பர் 31 வரை அபராதக் கட்டணத்துடன் தாமதமான ITRஐத் தாக்கல் செய்யலாம். தாமதக் கட்டணம் ரூ. 5,000. மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வரி செலுத்துவோருக்கு இந்த தாமதக் கட்டணம் ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நெறிப்படுத்தப்பட்ட திவால் விதிகள்:
புதிய திவால் விதிமுறைகள் தாக்கல் செய்யும் நடைமுறைகளை எளிதாக்கும், தனிநபர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான சிக்கலைக் குறைக்கும். நிதிப் போராட்டங்களுக்கு மிகவும் திறமையான தீர்வை வழங்குவதும், மீட்சியை ஊக்குவிப்பதும் இதன் இலக்காகும்.
.png)