1. Home
  2. தமிழ்நாடு

இதை தெரிஞ்சிக்கோங்க..! இந்த 6 பாகங்களில் உங்களுக்கு வலி இருந்தால் அது மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை..!

1

இதய நோயாளிகளின் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் அதிகப்படியான உடற்பயிற்சி போன்வை மாரடைப்பு நிகழ்வுகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. அதாவது, மாரடைப்பு எப்போது ஏற்படும் என்று சரியாகச் சொல்ல முடியாது என்றாலும், உங்கள் உடலின் சில பாகங்களில் உண்டாகும் வலி மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறிகளை தரலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.

மாரடைப்பு வருவதற்கு முன் நீங்கள் அவ்வப்போது அசௌகரியமாக உணர்வீர்கள். குறிப்பாக மார்புப் பகுதியை சுற்றிலும் அழுத்தமான வலி இருக்கும். இது பொதுவாக அனைவருக்கும் உண்டாகும் அறிகுறிதான். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) படி உங்களுக்கு கடுமையான அழுத்தம், வலி என்பது நீண்ட நேரம் இருக்கிறது. எனில் சமாளித்துவிடலாம் என நினைக்காமல் உடனே மருத்துவரை அணுகுதல் நல்லது.

முதுகு வலி : மார்பு வலி மாரடைப்புக்கான அறிகுறியாக இருந்தாலும், முதுகில் வலி இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு இந்த அறிகுறி அதிகமாக காட்டும். ஏனெனில் இந்த எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்காமல் விடக்கூடாது. மாரடைப்புக்கு முன்னும் பின்னும் ஏற்படும் முதுகுவலி குறித்து ஆண்களை விட பெண்களே அதிகம் புகார் கூறுவதாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறுகிறது.

தாடை வலி : உங்கள் தாடையில் வெளிப்படும் வலி என்பது தசைக் கோளாறு அல்லது பல்வலியைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். குறிப்பாக பெண்களின் முகத்தின் இடது பக்கத்தில் உள்ள தாடை வலி மாரடைப்புக்கான பொதுவான அறிகுறியாக இருக்கலாம். மார்பில் அசௌகரியம், மூச்சுத் திணறல், வியர்த்தல், மற்றும் குமட்டல் ஆகியவற்றுடன் தாடை வலியையும் நீங்கள் அனுபவிப்பதால், மருத்துவ உதவிக்கு உடனே விரைவது நல்லது.

கழுத்து வலி : இதய தசையில் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் இரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. உங்கள் மார்பை சுற்றிலும் அசௌகரியமான வலி தொடங்கும் போது, அந்த வலி காலப்போக்கில் உங்கள் கழுத்தில் பரவுகிறது. இதனால் கடினமான கழுத்து வலி, தசை அழுத்தம் மற்றும் திரிபு அல்லது பிற குணப்படுத்தக்கூடிய நோய்களின் அறிகுறியாக இருந்தாலும், இது மாரடைப்பு காரணமாகவும் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்க.

தோள்பட்டை : உங்கள் மார்பில் இருந்து கழுத்து, தாடை மற்றும் தோள்பட்டை வரை அசௌகரியமான வலி தொடங்கும் போது, அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் தோள்பட்டையில் யாரோ நன்கு மிதித்து நசுக்கியது போன்ற வலியை நீங்கள் அனுபவித்தால், குறிப்பாக உங்கள் மார்பிலிருந்து இடது தாடை, கை அல்லது கழுத்து வரையிலும் அந்த வலி இருந்தால் சற்றும் தாமதிக்காமல், மருத்துவவரை அழைக்கவும்.

வலது கை : இதய தசைக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதால் மாரடைப்பு வருவதற்கு முன் உங்கள் இடது கையில் வலியை ஏற்படுத்தும். இடது கையில் லேசான வலி, அதிக வலி இருந்தால் அது மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

ஒரு நபர் மாரடைப்பு அல்லது மாரடைப்பால் பாதிக்கப்படும்போது, உடனடியாக cardiopulmonary resuscitation (CPR) எனப்படும் மார்பை நன்கு கைகளை வைத்து அழுத்த வேண்டும் . பின் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து உங்கள் மருத்துவரை உடனே தொடர்பு கொள்ளவும்.

Trending News

Latest News

You May Like