1. Home
  2. தமிழ்நாடு

இதை தெரிஞ்சிக்கோங்க..! பட்டாவில் இறந்தவர்கள் பெயரை நீக்கி, வாரிசுகள் பெயரை சேர்ப்பது எப்படி?

1

பட்டாவில் பெயர் நீக்க, சேர்த்தல் ஆகியவற்றை நில உடமைதாரர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்காக மணிக்கணக்கில் தாலுகா அலுவலகத்துக்கு சென்று காத்திருக்க வேண்டியதில்லை.   

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பட்டாவில் இறந்தவர்கள் பெயரை நீக்கி, வாரிசுகள் பெயரை சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அந்த அறிவிப்பில், பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் அல்லது Citizen Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களில் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணைய வழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இருப்பினும் பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுக்கு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேற்படி விண்ணப்பங்கள, ஆவணங்களின் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆவணங்கள் பிறப்பிக்கப்பட்டு நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் இந்த ஆன்லைன் போர்ட்டல் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும். தமிழ்நாடு அரசு வழிவகை செய்திருக்கும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Trending News

Latest News

You May Like