இதை தெரிஞ்சிக்கோங்க..! பாம்பு வீட்டுக்குள் புகுந்தால் வனத்துறையை எப்படி அணுகுவது?
ஒருவேளை உங்கள் இல்லத்தில் பாம்பு புகுந்துவிட்டால் நீங்களாக நடவடிக்கை எடுப்பதை விட முதலில் வனத்துறைக்கு தகவல் கொடுப்பது அவசியம். அவ்வாறு தகவல் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் முறையாக பாம்பு பிடி வீரர்களை அனுப்பி வைப்பார்கள்.
"எனக்கு பாம்பு பிடி வீரர் பழக்கம் உள்ளது. என்னிடம் ஒருவரின் அலைப்பேசி எண் உள்ளது. நான் அவரை அழைக்கலாமா?" என நீங்கள் எண்ணினால், அந்த பாம்புபிடி வீரர் சம்மந்தப்பட்ட இடத்தில் பணியை துவங்கும் முன்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பின் அவர்கள் அனுமதி பெற்று, முறையான உடை, பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த பின்னர் தான் பாம்பை பிடிக்க முயலவேண்டும்.
எப்படி வனத்துறையிடம் தெரிவிப்பது?
மனிதர்கள் பாம்பு மற்றும் பிற வனவுயிர்களை எதிர்கொள்ள நேரிட்டால், வனத்துறையிடம் தகவல் தெரிவிக்க 1800 4254 5456 எனும் இலவச எண் 2017ஆகஸ்ட் மாதம் முதலே செயல்பாட்டில் உள்ளது. இது 24 மணி நேரமும் செயல்படும்.
இந்த எண்ணை அழைக்கும்போது உங்கள் வீடு/கடை எங்கிருந்தாலும் அந்த பகுதிக்கு வனத்துறை தரப்பில் வீரர்கள் வருவார்கள் அல்லது அருகில் உள்ள பாம்புப்பிடி வீரர்களை வனத்துறையினர் அனுப்பி வைப்பார்கள். எனவே முதலில் வனத்துறையினரிடம் தகவல் தெரிவிப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கோவை காளப்பநாயக்கன்பாளையத்தில் ஒர்க் ஷாப்பில் புகுந்த கட்டுவிரியன் பாம்பை கணுவாய் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் (35) எனும் பாம்பு பிடி வீரர் ஒருவர்பிடிக்கச்சென்ற போது, பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் போட்டபின் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாம்பை பிடிக்க முயன்ற போது அது காலில் கண்டித்துள்ளது. அதை அவர் பிடித்து பையில் போட்ட நிலையில் மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பொறுத்தவரை முறையாக வனத்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.