1. Home
  2. தமிழ்நாடு

இதை தெரிஞ்சிக்கோங்க..! மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கோயிலுக்கு ஏன் செல்லக்கூடாது தெரியுமா ?

1

ஒரு உயிரை உருவாக்கும் பெரும்பங்கு பெண்களையே சாரும் அதனால்தான் பெண்களை தெய்வத்திற்கு சமமானவர்கள் என்று சாஸ்திரம் போற்றுகின்றது.

அந்த கால கருங்கல் கோவில்கள் மனித உடல்நிலை வெப்பநிலையை பொறுத்தே அமைக்க பட்டது . அதாவது மனித உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவோ அதே வெப்பநிலை கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில்களுக்கும் உண்டு .

மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் .அந்த நேரங்களில் கோவில்களுக்கு பெண்கள் வந்தால் இன்னும் அதிக படியான உஷ்ணம் உண்டாகும் . இதனால் அதிக படியான ரத்தபோக்கு உண்டாகும் . இதை கருத்தில் கொண்டே கோவில்களுக்கு மாதவிடாய் காலங்களில் பெண்கள் வரக்கூடாது என்று முன்னோர்கள் கூறினார் .

ஒரு பெண்ணிற்குள் உள்ளே என்ன இருக்கிறதோ அதே இரத்தம் தான் மாதவிலக்கு நேரத்தில் வெளியேறுகிறது. மேலும் எந்த இரத்தம் வெளி ஏறுகிறதோ, அதிலே தான் ஒவ்வொரு மனிதனும் கருவாகி, பின்பு திசுவாகி, பிள்ளையாகி, பெரிய ஆளாகிறான்.அதனால் தீட்டு என நவீன காலத்திலும் பெண்ணை ஒதுக்கி வைப்பது முட்டாள்தனமாகும்.

அந்த காலங்களில் பெரியவர்கள் மாதவிலக்கு நேரத்தில் பூரண ஓய்வினை பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தினை கொண்டு செயல்பட்டனர்.

இதுவே காலப்போக்கில் தீட்டு நாட்களில் பெண்களை தீண்ட கூடாது மற்றும் இறைவழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற மூட நம்பிக்கையாக உருவெடுத்துவிட்டது என்பதே உண்மையான விசயமாகும்.

மாதவிடாயும் கோவிலும்

இந்தியா முழுவதும் அம்பிகைக்கு பல சக்தி பீடங்கள் உள்ளன. அதில் ஒன்று அசாமின் காமாக்யா கோவில். இங்கு வருடத்தின் 3-4 நாட்கள் அதிசயத்தக்க செயல் நடைபெறும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் எப்படி உதிரப்போக்கு ஏற்படுமோ அதே போல அம்பிகைக்கு ஏற்படும் என்று கோவில் மூடப்பட்டு மூன்று நாட்களுக்கு ஆண்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இன்றைக்கும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இதே போல செங்கனூர் பகவதி கோயிலும்ஆண்களை அனுமதிக்காத நடைமுறை உள்ளது.

மாதவிடாய் புனிதமும் & விஞ்ஞானமும்

புராண காலத்தோடும், கடவுளோடும் தொடர்புடைய விஷயத்தை தீட்டு என்று முன்னோர்கள் சொன்னார்களா என யோசிக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் ஏன் கோயிலுக்கு கூடாது என்று சொல்வதற்கு அந்த காலத்தில் பெண்கள் பயன்படுத்திய உடைகள் மிகக் குறைவு. காலகட்டத்திற்கு ஏற்ப எடுத்த முடிவு. உதிரப்போக்கு காலத்தில் பெண்கள் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருப்பது அவசியம். அவர்களை தனிமைப்படுத்தி வைத்ததற்கான காரணமும் தொற்று பாதிப்பை கருதியே.

Trending News

Latest News

You May Like