இதை தெரிஞ்சிக்கோங்க..! வாரிசு இல்லாத சொத்து யாருக்கு போகும் தெரியுமா ?
பொதுவாக பல குடும்பங்களில் உறவுகளிடம் நிலவும் பொதுவான பிரச்சினை சொத்து அல்லது பணம் தொடர்பான சர்ச்சைகள். அதுவும் வாரிசுகள் இல்லாத ஒருவருக்கு சொத்து இருந்தால் அதை யார், எப்படி பங்கிட்டு கொள்வது என்ற கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒருவருக்கு வாரிசு இல்லாத நிலை உருவாகிவிடுகிறது. வாரிசு இல்லாத சொத்துக்கள் பற்றிய பலவிதமான சந்தேகங்கள் நடைமுறையில் உள்ளது.
வாரிசு இல்லாத ஒருவர் தன் சுயவிருப்பத்தினால் தனது சொத்து சுகங்களை உயில் மூலம் தான் விரும்பும் நபருக்கு மாற்றித் தரலாம்.வாரிசு இல்லாதவர்களுக்கு தத்துப்பிள்ளை இல்லாத பட்சத்தில் அவர்கள் உயில் எழுதிய நபரை முழுச் சொத்தும் சேரும்.
ஆனால் இறுதி காரியம் செய்யும் நபருக்கு சொத்தை பயன்படுத்தும் முழு உரிமையும் உண்டு. அதனால் வாரிசு இல்லாதவர்களுக்கு சொத்து இருந்தால் இறுதி காரியம் செய்யும் நபருக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் என்பதால் சிலர் பங்காளிவாரிசுகளை இறுதி காரியம் செய்ய விடுவதில்லை.
இறந்த மகனின் சொத்தில் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் அதே பங்கு தாய்க்கும் கிடைக்கும். கணவனின் சொத்து பிரிக்கப்பட்டால், அந்தச் சொத்தில் அவரது மனைவிக்கும் அவரது குழந்தைகளுக்கு உள்ள அதே உரிமைகள் (இந்தியாவில் கணவரின் சொத்து மீதான மனைவியின் உரிமை) கிடைக்கும். இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 8ன் படி, குழந்தையின் சொத்து மீதான பெற்றோரின் உரிமைகளை வரையறுக்கிறது. இதன் கீழ், குழந்தையின் சொத்துக்கு தாய் முதல் வாரிசு, அதே சமயம் குழந்தையின் சொத்துக்கு தந்தை இரண்டாவது வாரிசு. ஒரு இறந்த நபருக்கு அவரது தாய், மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தால், சொத்து தாய், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சமமாக பிரிக்கப்படுகிறது.
திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண் என்றால்…
இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி, ஆண் திருமணமாகாதவராக இருந்தால், அவரது சொத்து முதல் வாரிசு, அவரது தாய் மற்றும் இரண்டாவது வாரிசான அவரது தந்தைக்கு செல்லும். தாய் உயிருடன் இல்லாவிட்டால், சொத்து தந்தை மற்றும் அவரது இணை வாரிசுகளுக்கு போகும். இறந்தவர் இந்து திருமணமான ஆணாக இருந்து, உயில் இல்லாமல் இறந்தால், அவரது மனைவி இந்து வாரிசு சட்டம் 1956-ன் படி சொத்துக்கு வாரிசாவார். அத்தகைய வழக்கில், அவரது மனைவி வகுப்பு 1 வாரிசாக கருதப்படுவார். அவர் சொத்துக்களை மற்ற சட்டப்பூர்வ வாரிசுகளுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வார்.
உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை என்றாலும், பதிவு செய்யப்பட்ட உயில் எனில் அதை சுலபமாக மெய்ப்பித் தலுக்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கும். முக்கியமாக உயிலில் இரண்டு சாட்சிகள் கையொப்பம் இட வேண்டும். பின்னாளில் உயிலில் ஏதேனும் பிரச்னை எனில் நீதிமன்றத்தில் அவர்களுடைய வாக்குமூலம் தேவைப்படும். உயில் மூலம் பலன் அடையும் நபர் சாட்சி கையொப்பம் இடுவதைத் தவிர்த்தல் நல்லது. மேலும், சாட்சிகள் மிகவும் வயதானவர்களாக இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
18 வயது நிரம்பிய யாரும் தங்களுடைய சொத்துகளை உயிலாக எழுத முடியும். சில காரணங்களின்போது மட்டும் 21 வயது நிரம்பியவர்தான் உயில் எழுத முடியும். உயில் எழுதும்போது அனைத்து அசையும், அசையா சொத்துகளையும் எதையும் விட்டுவிடாமல் விரிவாகக் குறிப்பிட்டு தனது காலத்துக்குப் பின்பு யாருக்கு என்ன சென்று சேர வேண்டும் என்பதையும், ஏன் இப்படி பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பதற்கான காரணங்களையும் விளக்கமாக எழுதுவது நல்லது.
உயிலை ஒரு முறை மட்டுமே எழுத முடியும் என்றில்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இறுதியாக எழுதப்பட்ட
உயிலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். அதேபோல் உயில் எழுதிய பிறகும்கூட அந்தச் சொத்தை அவர் விற்க முடியும். உயில் எழுதியவர் இறந்த பிறகு, உயிலில் குறிப்பிட்ட சொத்து விற்கப்பட்டிருந்தால் சொத்து வாங்கியவரிடம் உயிலின் பேரில் கோர முடியாது.