1. Home
  2. தமிழ்நாடு

இதை தெரிஞ்சிக்கோங்க..! கீரையை நறுக்கி ஃப்ரிட்ஜுக்குள் வைத்து மறுநாள் சமைக்கலாமா?

1

காய்கறிகள் வாங்கி வந்த உடன் நேரடியாக எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. வெற்றுநீரில் நன்றாக கழுவி விடவும். இதன் மூலம் காய்கறிகளில் இருக்கும் மண் போவதோடு சமைக்கும் போது சுத்தம் செய்யவும் எளிதாக இருக்கும்.


காய்கறிகளை ஈரமாக சேமித்து வைக்காமல் கழுவிய உடன் டவலில் துடைத்து உலரவிடவும்.பிறகு ஒவ்வொரு காய்கறீயையும் தனித்தனியாக சேர்த்து சேமித்து வைக்கவும். பிளாஸ்டிக் பையாக இருக்கலாம், அதற்கென துணிப்பைகளை கொண்டிருக்கலாம். இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
பிறகு அவற்றை ஃப்ரிட்ஜ்ஜுக்குள் வைக்க வேண்டும்.

இனிப்பு உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முள்ளங்கி மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகள் குறைந்த ஸ்டார்ச் காய்கறிகள். இவை எல்லாமெ ஆக்ஸிஜனேற்றம் கொண்டவை, ஈரப்பதம் இழப்பதோ, சிதைவதோ இல்லாத காய்கறிகள். இவற்றை தோலுரித்து வெட்டக்கூடிய நிலையில் இதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வைத்திருக்கலாம். காய்கறிகளை அடைக்கும் டப்பாவின் மேல் ஈரமான மெல்லிய துணிகள் கொண்டு மூடப்படலாம்.
வெங்காயம் எப்போதும் திறந்த நிலையில் வைக்க கூடாது. இது கிருமிகளை ஈர்க்கும் சக்தி கொண்டது. அதனால் வெங்காயத்தை உங்களுக்கு ஏற்ற வகையில் நறுக்கியவுடன் அலுமினியத்தாளில் போர்த்தி மூடி வைக்க வேண்டும். வாசனை வருவதை தவிர்க்க ஒரு டப்பாவில் போட்டும் வைக்கலாம். மற்ற காய்கறிகளையும் டப்பாவில் போட்டு வைத்திருக்கலாம்.

சிலுவை காய்கறிகள் என்று அழைக்கப்படும் ப்ரக்கோலி, காலிஃப்ளவர், பிரஸ்ஸல்ஸ், காலே போன்றவை கடினமான தண்டுகள் மற்றூம் தோல் இலைகளை கொண்டவை. இதை வாங்கி 4 நாட்களுக்குள் சமைத்துவிட வேண்டும். இந்த காய்கறிகளை சுத்தம் செய்து டப்பாக்களில் அடைத்து ஃபிட்ஜ்ஜில் வைத்தாலும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டு. அதே போன்று செலரி தண்டுகள் மற்றும் காளான்கள் எனில் மூன்று அல்லது நான்குகளுக்கு வைத்து பயன்படுத்தலாம். எனினும் டப்பாக்களை இறுக்கமாக மூட வேண்டாம்.
குடை மிளகாய், பச்சை பீன்ஸ், வெள்ளரி மற்றும் ஸ்குவாஷ் போன்றவை இரண்டு நாட்களுக்கு முன்பே வெட்டி வைக்கலாம். எனினும் இதை பிரத்யேகமான டப்பாக்களில் போட்டு வைக்கலாம்.

காய்கறிகளில் கீரையும் ஒன்றுதானே என்று பலரும் நினைத்து நறுக்கி விடுவார்கள். ஆனால் மென்மையான இலைகளை நறுக்குவதன் மூலம் அதன் தாவர செல்கள் சேதமடையலாம். இது விரைவாக சிராய்ப்பு மற்றும் கருமையான மெல்லிய விளிம்புகளை கீரையின் நுனியில் விட்டிருக்கும். கீரைகள், இலைகள் போன்றவற்றை சமைக்க விரும்பினால் சமைப்பதற்கு முன்பு சுத்தம் செய்வது, நறுக்குவது நல்லது. இயன்றவை இதை வாங்கி அன்றே அல்லது வேலைக்கு செல்பவர்கள் அடுத்தநாளே சமைத்துவிடுவது பாதுகாப்பானது.

கீரைகள் நறுக்கினாலும் கூர்மையான் கத்தி கொண்டு நறுக்குவது நல்லது. ஏனெனில் கத்தி கூர்மை இல்லாத போது கீரை இலைகள் சேதமடையும் போது செல்கள் சேதமடையலாம். இதை சமைப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு சுத்தம் செய்யலாம். கீரைகள் வாங்கி வைப்பதாக இருந்தால் அதன் காம்புகளை மட்டும் மண் போக அலசி உலரவைத்து பிறகு மென்மையான துணியில் சுற்றி வைக்கலாம்.

காய்கறிகளை எப்படி ஃப்ரிட்ஜ்ஜில் சேமிப்பது?

  • ​வெள்ளரிக்காயை காற்றுப்புகாத டப்பாக்களில் வைக்கவேண்டும்.
  • கேரட், செலரி, முள்ளங்கி போன்றவற்றை ஈரமான துணியில் போர்த்தி வைக்கவும்.
  • பூண்டு வெங்காயம் போன்றவற்றை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
  • முள்ளங்கியை தண்ணீரில் மூழ்க வைத்து ஃப்ரிட்ஜ்ஜுள் சேமிக்கலாம். எனினும் தினமும் தண்ணீரைம் மாற்ற வேண்டும்.
  • வெட்டப்பட்ட காய்கறிகளை சரியான முறையில் சேமித்து வைப்பது புத்துணர்ச்சியையும் சுவையையும் நீண்ட காலம் வைத்திருக்க செய்கிறது. எனினும் காய்கறிகள் வெட்டி வைத்தாலும் 2 முதல் 3 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

Trending News

Latest News

You May Like