1. Home
  2. தமிழ்நாடு

இதை தெரிஞ்சிக்கோங்க..! வீடு வாங்க போறீங்களா.. புதிய விதிகள் வந்துருக்கு..!

1

நிலம் பதிவு செய்பவர்களுக்கு புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

சொத்துக்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் நிலம் பதிவு செய்யப்படுவது வழக்கமான ஒன்று. இதற்கு பத்திரம் மற்றும் பட்டா ஆவணங்கள் கட்டாயமாக தேவை. கட்டிடம், மனை அனுமதிக்கு மற்றும் நிலம் பதிவு செய்வதற்கு பட்டாவை சரிபார்க்க வேண்டியது அவசியம். தற்போது நிலம் பதிவு செய்வது, பட்டா பெறுவது உள்ளிட்டவற்றை எளிமையாக்க டிஜிட்டல் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலப்பதிவு சட்டத்தில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் ஆன்லைனில் ஆவண சமர்பிப்பு, டிஜிட்டல் முறை, பயோமெட்ரிக் சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகளும் இடம்பெற்றுள்ளன. நிலப்பதிவில் மோசடிகளை தடுப்பதற்காகவும், வெளிப்படைய தன்மையை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது புதிய விதிகள்.

நிலம் வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரும் புதிய விதிகளின் படி ஆதார் அடிப்படையிலான ஆவணங்களை சமர்பிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. மேலும் விற்பனை மற்றும் பிற ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் Blockchain அடிப்படையிலான டிஜிட்டல் நிலப் பதிவு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்காக நேரில் ஆஜராக வேண்டும். நிலத்தை துல்லியமாக அளவீடு செய்வதற்கு ஜிஐஎஸ் அடிப்படையிலான நில மேப்பிங்கை யூஸ் செய்ய வேண்டும். இந்த புதிய விதிகள் மூலமாக நிலா மோசடிகள் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் பதிவுகள் பராமரிக்கப்படும்.

விற்பனை ஒப்பந்த ஆவணம், பயோமெட்ரிக் வருகைப் பதிவு, ஆன்லைன் ஜிஐஎஸ் வரைபடம் வாயிலாக சொத்து இருப்பிடத்தை சரிபார்த்தல், வரி ரசீது போன்றவற்றை புதிய விதிகளில் பெறலாம். நாடு முழுவதும் நிலப் பதிவு செய்வதற்கான புதிய விதிகள் செயல்படுத்தப்பட உள்ளதால், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

Trending News

Latest News

You May Like