1. Home
  2. தமிழ்நாடு

கெட் அவுட் ஸ்டாலின்...முதல்வருக்கு எதிராக 3 லட்சம் ட்வீட்டுக்கள்... !

1

தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்றால் 'கோ பேக் மோடி' என்பதற்கு பதிலாக 'கெட் அவுட் மோடி' எனத் துரத்துவோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனை செயல்படுத்தும் வகையில்  திமுக ஊடக அணியினர் 'கெட் அவுட் மோடி' என்று இந்திய அளவில் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் செய்தனர். இதற்கு அண்ணாமலை மிகக் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பிப்ரவரி 21ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு 'கெட் அவுட் ஸ்டாலின்' என்ற டிரெண்டிங்கை தொடங்கி வைக்க இருப்பதாக  அறிவித்தார்.

இந்நிலையில், காலை 6 மணிக்கு 'கெட் அவுட் ஸ்டாலின்' டிரெண்டிங்கை தொடங்கிவைத்த அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்  "ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என அனைத்துக்கும் தமிழகத்தில் உள்ள திமுக தலைமையிலான அரசு விரைவில் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள்" என பதிவிட்டுள்ளார்.  அண்ணாமலை டிரெண்டிங்கை தொடங்கிவைத்து 3 மணிநேரமாகும் நிலையில், இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பதிவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

Trending News

Latest News

You May Like