1. Home
  2. தமிழ்நாடு

காசா பகுதியில் இருந்து உடனே வெளியேறுங்க..! இஸ்ரேல் அவசர எச்சரிக்கை..!

1

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் 6 மாதங்களை கடந்துள்ளது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 34 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77,000 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 79 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 86 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ஹமாஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வடக்கு காசாவின் பெயிட் லாஹியா பகுதியில் வசிக்கும் மக்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளரான லெப்ட்டினன்ட் கர்னல் அவிச்சாய் அட்ரே அப்பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் நீங்கள் ஒரு ஆபத்தான போர் மண்டலத்தில் உள்ளீர்கள், உடனடியாக இந்த பகுதியை விட்டு வெளியேறுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் உள்ள தீவிரவாத உள்கட்டமைப்பிற்கு எதிராக ராணுவம் வலுவான நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அட்ரே தெரிவித்துள்ளார். ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தரைவழி தாக்குதலின் தொடக்கத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வடக்கு காசாவில் உள்ள அனைத்து பாலஸ்தீனிய குடிமக்களையும் தெற்கு பகுதியிலிருந்து வெளியேறுமாறு எச்சரித்தது.

ஆனால் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அந்த பகுதியிலேயே உள்ளனர். இந்நிலையில் மீண்டும் இந்நிலையில் மீண்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை லாகிய பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் லாகியா பகுதியில் இஸ்ரேல் படைகள் தங்களின் தாக்குதலை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like