1. Home
  2. தமிழ்நாடு

இதைச் செஞ்சாலே... கொரோனாவுல இருந்து தப்பிக்கலாம்!!  சென்னைவாசிகள் கைக்கொள்ளும் பாரம்பரிய பழக்கம்!

இதைச் செஞ்சாலே... கொரோனாவுல இருந்து தப்பிக்கலாம்!!  சென்னைவாசிகள் கைக்கொள்ளும் பாரம்பரிய பழக்கம்!


தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும், வீடு வீடாகத் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருப்படுகின்றன. 

கொரோனாவிற்கான  ஆரம்ப அறிகுறிகளாக சளி, இருமல், லேசான காய்ச்சல் ஆகியவை மட்டுமே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கண் சிவப்பாக இருத்தல், பசியின்மை, வயிற்றுப் போக்கு, அஜீரணம் என்று புதிய அறிகுறிகள் கொரோனா தொற்று குறித்து மேலும் பயமுறுத்துகின்றன. தற்போது காற்றின் மூலம் பரவக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து இயற்கையான வழியில் தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை சென்னைவாசிகள் கடைப்பிடிக்கத் துவங்கியுள்ளனர். சென்னையில், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி,  வடிகட்டி அதன் பின்னரே குடிக்கிறார்கள். ஆர்.ஓ.வாட்டர் வைத்திருப்பவர்களும் கூட அந்த நீரையும் காய்ச்சிய பின்னரே குடிக்கின்றனர். அத்துடன் காலையில் எழுந்ததும் மஞ்சள் தூள், மிளகு, இஞ்சி கலந்த சுடு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக பெரும்பாலானோர் வைத்துள்ளனர். 

கொரோனா அறிகுறிகளில் முக்கியமான  தொண்டை வலி மற்றும் அது  சார்ந்த பிரச்சினைகளை வெந்நீர் போக்கி விடும் என்பதால், அனைத்து வீடுகளிலும் தற்போது வெந்நீர் குடிக்கும் பழைய நடைமுறை திரும்பவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like